ஸ்ரீயா ஸ்ரீமதா?

இராமாயணத்தை ஸ்ரீ ராமாயணம் என்றும் ஸ்ரீமத் ராமாயணம் என்றும் அழைப்பாருளர். இவ்விரண்டுக்கும் என்ன வித்யாசம்? இவற்றில் எதை ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்கள் ஆதரித்தார்கள் என்று ஒரு சிறு ஆராய்ச்சி. ஸ்ரீ என்பது ஸ்ரீதேவியின் திருநாமம். முமூக்ஷுப்படியில் பிள்ளை உலகாரியன் “ஸ்ரீ என்று பெரிய பிராட்டியார்க்குத் திருநாமம்” என்கிறார். தம்முடைய சதுஶ்லோகியில் ஆளவந்தாரும் “ஸ்ரீரித்யேவ ச நாம தே