நடந்தவள் ஏற்றம்

சிறை இருந்தவள் ஏற்றம் அறிவோம். நடந்தவன் ஏற்றமும் அறிவோம். இது என்ன நடந்தவள் ஏற்றம்? கொடியவள் தன் சொற்கொண்ட தயரதன் பெருமாளை காட்டுக்குச் செல்ல நியமிக்க, தான் மட்டும் செல்ல வேணும் என நினைத்தவனை பிராட்டி மறுதலிக்க, காட்டில் உள்ள கடினங்களை எம்பெருமான் அவளுக்கு எடுத்துரைத்தான். மார்க்கா லதா கண்டக ஸம்பூர்ணா: – அதாவது, காடென்பது

ஸ்ரீயா ஸ்ரீமதா?

இராமாயணத்தை ஸ்ரீ ராமாயணம் என்றும் ஸ்ரீமத் ராமாயணம் என்றும் அழைப்பாருளர். இவ்விரண்டுக்கும் என்ன வித்யாசம்? இவற்றில் எதை ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்கள் ஆதரித்தார்கள் என்று ஒரு சிறு ஆராய்ச்சி. ஸ்ரீ என்பது ஸ்ரீதேவியின் திருநாமம். முமூக்ஷுப்படியில் பிள்ளை உலகாரியன் “ஸ்ரீ என்று பெரிய பிராட்டியார்க்குத் திருநாமம்” என்கிறார். தம்முடைய சதுஶ்லோகியில் ஆளவந்தாரும் “ஸ்ரீரித்யேவ ச நாம தே