ஏறிட்டுக் கொண்டமை

நம்முடைய தமிழ் அகராதியில் ஏறிட்டுக் கொள்ளுதல் என்றொரு சொற்றொடர் உண்டு. வந்தேறி என்றும் சொல்லுவர்கள். தனக்கல்லாதது போலிருக்கும் ஒரு பொறுப்பையோ தன்மையையோ அடைதல் என்பதாம். வடமொழியில் அந்யாபதேஶம் என்பர். ஆண்டாள் பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் த்விஜ குலத்தில் பிறந்து வைத்தேயும், கோபிகையர் தன்மை அடைந்தாள் என்று பார்க்கிறோம். ஆழ்வார்கள் புருஷர்களாய்ப் பிறந்தும் பெண் நிலைமை எய்தி, நாயகியாகவும்,

ஒருங்க விடுவர்

ஆசார்ய ஹ்ருதயத்தில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் அதியத்புதமான ஸூத்ரம் கேளீர்: “பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ர வாக்யங்கள் ஒருங்க விடுவர்”. அதாவது ஸ்ரீபாஷ்யம் அருளிச் செய்தவரான இராமநுஜர் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைத் துணை கொண்டே ப்ரஹ்ம ஸூத்ர வாக்யார்த்தங்களை அறுதியிடுவர் என்பதாம். இங்கு திருவாய்மொழி என்றும் ப்ரஹ்ம ஸூத்ரம் என்றும் நிர்ணயித்திருந்தாலும், திருவாய்மொழி என்றவிடம் எல்லா