புதுக் கணக்கு

நம்முடைய ஆழ்வார்கள் தம்முடைய திவ்ய ப்ரபந்தங்களில் பலவிடங்களில் கணிதத்தை உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். திருச்சந்தவிருத்தம் துவக்கத்திலேயே திருமழிசை ஆழ்வார் பல எண்கணக்குகளைக் காட்டுகிறார். உதாரணமாக இரண்டாம் பாசுரம்: ஆறுமாறுமாறுமாய் ஓரைந்துமைந்துமைந்துமாய் ஏறுசீரிரண்டு மூன்றும் ஏழுமாறுமெட்டுமாய் வேறுவேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய் ஊறொடோசையாய ஐந்தும் ஆயவாய மாயனே! இப்படியே பலவுள. இவ்விதமாக மட்டுமில்லாமல், கணக்கர்த்தம் ஜனிக்காவிட்டாலும் கணக்கு சப்தம் காட்டுமிடங்களும்

சேற்றில் ஒரு குளியல்

இதென்ன? சேற்றில் குளியல் என்று நாம் ஒன்று செய்வதா? சுத்தமான ஜலத்திலோ நீர் நிலைகளிலோ நீராடுவதன்றோ நமக்குக் குளியல் என விதிக்கப்பட்டுள்ளது. ஶாஸ்த்ரங்கள் சொல்லும் ஆசாரமும் இதைத் தானே வலியுறுத்துகிறது. ஸ்நாநங்கள் நித்ய ஸ்நாநம், நைமித்திக ஸ்நாநம், ப்ராயஶ்சித்த ஸ்நாநம் என்று பல வகைப்படும். பல கார்யங்களைச் செய்வதற்கு குளித்தல் அவஸ்யமாகிறது. “குளித்து மூன்றனலை ஓம்பும்”