சேற்றில் ஒரு குளியல்

இதென்ன? சேற்றில் குளியல் என்று நாம் ஒன்று செய்வதா? சுத்தமான ஜலத்திலோ நீர் நிலைகளிலோ நீராடுவதன்றோ நமக்குக் குளியல் என விதிக்கப்பட்டுள்ளது. ஶாஸ்த்ரங்கள் சொல்லும் ஆசாரமும் இதைத் தானே வலியுறுத்துகிறது. ஸ்நாநங்கள் நித்ய ஸ்நாநம், நைமித்திக ஸ்நாநம், ப்ராயஶ்சித்த ஸ்நாநம் என்று பல வகைப்படும். பல கார்யங்களைச் செய்வதற்கு குளித்தல் அவஸ்யமாகிறது. “குளித்து மூன்றனலை ஓம்பும்”

நடந்தவள் ஏற்றம்

சிறை இருந்தவள் ஏற்றம் அறிவோம். நடந்தவன் ஏற்றமும் அறிவோம். இது என்ன நடந்தவள் ஏற்றம்? கொடியவள் தன் சொற்கொண்ட தயரதன் பெருமாளை காட்டுக்குச் செல்ல நியமிக்க, தான் மட்டும் செல்ல வேணும் என நினைத்தவனை பிராட்டி மறுதலிக்க, காட்டில் உள்ள கடினங்களை எம்பெருமான் அவளுக்கு எடுத்துரைத்தான். மார்க்கா லதா கண்டக ஸம்பூர்ணா: – அதாவது, காடென்பது

குறையும் நிறையும்

ஒரு ஆசார்யன் தன்னுடைய சிஷ்யனுக்கு எம்பெருமான் மற்றும் பிராட்டியினுடைய பெருமைகளையும், சேதனனுடைய சிறுமையையும் பரக்க உபதேசித்து வந்தார். சிஷ்யனுக்கு ஒரு விபரீத ஆசை ஏற்பட்டது. சேதனனுக்கு ஒரு தனிப் பெருமை சொல்ல வேண்டும். ஆனால் அதோடு நிற்காமல் அவ்வேளையிலேயே எம்பெருமானுக்கும் பிராட்டிக்கும் ஒரு குறையும் சொல்ல வேண்டும் என்று ஆசார்யனிடத்தில் விண்ணப்பித்தான். இப்படிக் கேட்கும் சிஷ்யனுக்கு