அரக்கர் செய்த உதவி 2

2. பிராட்டிக்குச் செய்த உதவி எவ்வுலகிற்கும் தாயிருக்கும் வண்ணமான அவனும் கருணையிலாதவனாம்படி “தேவ்யா காருண்யரூபயா” என்று கருணையே வடிவெடுத்தவளான பெரிய பிராட்டியாரை ஹிம்சித்தார்கள் அரக்கர் என்றே நாம் கண்டிருக்க, அவர்கள் எவ்வாறு உதவி செய்தார்கள் எனில், எம்பெருமானைக் காட்டிலும் விஞ்சியிருக்கும் அவள் கருணையை அவள் திருவாக்காலேயே இவ்வுலகத்திற்கு வெளிப்படுத்தியமையாம். சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையிற்

அரக்கர் செய்த உதவி 1

1. பெருமாளுக்குச் செய்த உதவி தாடகையின் புதல்வனான மாரீசன் என்பானொரு அரக்கன், சக்ரவர்த்தித் திருமகனை முன்னர் முன்னமே விஶ்வாமித்ர மஹரிஷியின் யாகத்தின் போது எதிர்த்து வந்து உயிர் பிழைத்து ஓடியவன். அப்படிப்பட்டவனை பின்னர் பொல்லா அரக்கனான ராவணன் ஸ்ரீ ராமனுக்கு எதிராகத் தனக்கு ஸஹாயம் செய்யும்படி கேட்கும் போது, அவன் கூறும் வார்த்தை காண்மின். ராமோ

அரக்கர் செய்த உதவி 0

விபரீதமாய்த் தலைப்பு அமைப்பதே நமக்கு வழக்கமாகி விட்டது போலும். ஆகையால் இந்த தலைப்பு யாருக்கும் ஆச்சரியம் விளைவிக்காது எனத் தோன்றுகிறது. இருந்தாலும், ராக்ஷசர்கள் என்பவர்கள் ஸஹாயம் என்றொன்று செய்வார்களா, அப்படிச் செய்தார்கள் என்றால் அதை யாருக்குச் செய்தார்கள் என்ற கேள்விகள் எழுகின்றன. இதைச் சிறிது ஆராய்வோம். அரக்கர்கள் தங்களுக்குள் ஒருவொருக்கொருவர் உதவி செய்து கொண்டார்கள் என்று