மூவகைத் தீர்த்தம்

ஆற்று நீர், ஊற்று நீர், வேற்று (மழை) நீர் என்பதை முந்நீர் என்பர்கள் தமிழர். நம்மாழ்வாரும் திருவாய்மொழியில் “முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில்வண்ணனே!” என்கிறார். அதன்றி, மூன்று செய்கையுடைய நீர் – அதாவது படைத்தல், காத்தல், அழித்தல் செய்யும் நீர் என்றும் பொருள் கூறுவர். விரிவுக்கஞ்சி இங்கு இதை விவரிக்கவில்லை. நம் தலைப்பில் மூவகைத்

ஸம்ப்ரதாயத்தின் திறவுகோல்

செய்யுளிலோ க்ரந்தத்திலோ ஒரு சொல்லானது அதற்கு முன் வரும் பதத்தோடு சேர்ந்தும் பின் வரும் பதத்தோடு சேர்ந்தும் இருபொருள்களைத் தரக்கூடும். இவ்விரு முறைகளிலும் அர்த்தம் சித்தித்து வருவதற்கு வடமொழியில் காகாக்ஷி கோலக ந்யாயம் என்று பெயர். காக்கை ஒரு கண்ணைக் கொண்டே இரண்டு பக்கமும் பார்க்கும் என்று கூறுவதுண்டு. அது போலே, இந்த ஒரு சொல்லும்

புதுக் கணக்கு

நம்முடைய ஆழ்வார்கள் தம்முடைய திவ்ய ப்ரபந்தங்களில் பலவிடங்களில் கணிதத்தை உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். திருச்சந்தவிருத்தம் துவக்கத்திலேயே திருமழிசை ஆழ்வார் பல எண்கணக்குகளைக் காட்டுகிறார். உதாரணமாக இரண்டாம் பாசுரம்: ஆறுமாறுமாறுமாய் ஓரைந்துமைந்துமைந்துமாய் ஏறுசீரிரண்டு மூன்றும் ஏழுமாறுமெட்டுமாய் வேறுவேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய் ஊறொடோசையாய ஐந்தும் ஆயவாய மாயனே! இப்படியே பலவுள. இவ்விதமாக மட்டுமில்லாமல், கணக்கர்த்தம் ஜனிக்காவிட்டாலும் கணக்கு சப்தம் காட்டுமிடங்களும்

சேற்றில் ஒரு குளியல்

இதென்ன? சேற்றில் குளியல் என்று நாம் ஒன்று செய்வதா? சுத்தமான ஜலத்திலோ நீர் நிலைகளிலோ நீராடுவதன்றோ நமக்குக் குளியல் என விதிக்கப்பட்டுள்ளது. ஶாஸ்த்ரங்கள் சொல்லும் ஆசாரமும் இதைத் தானே வலியுறுத்துகிறது. ஸ்நாநங்கள் நித்ய ஸ்நாநம், நைமித்திக ஸ்நாநம், ப்ராயஶ்சித்த ஸ்நாநம் என்று பல வகைப்படும். பல கார்யங்களைச் செய்வதற்கு குளித்தல் அவஸ்யமாகிறது. “குளித்து மூன்றனலை ஓம்பும்”

விரதங்கள் மூன்று

விரதம் என்பது ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு ஒழுக்கத்தைத் தவறாமல் கடைப்பிடிக்கும் மார்க்கமாகும். உலகில் எத்தனையோ விரதங்கள் உள்ளன. சிறுவர் முதல் பெரியவருக்கும், ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும், பல பருவங்களுக்குத் தகுந்தவையாகவும், இப்படிப் பல வகைகளான விரதங்கள் இருக்கின்றன. சில சமயங்களில் விலங்குகள் கூட விரதங்கள் அநுஷ்டிக்கக் காண்கிறோம். ஆழ்வார்களும் ஆசார்யர்களும் தாங்களாகவும் அநுகாரத்திலேயும் விரதங்களை